search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரி ஜெய்சங்கர்
    X
    மத்திய மந்திரி ஜெய்சங்கர்

    சர்வதேச சட்ட நெறிமுறைகளை மதிக்க வேண்டும்- ரிக் கூட்டத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் வலியுறுத்தல்

    சீனா, ரஷியாவுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், முன்னணி நாடுகள் சர்வதேச சட்டத்தின் நெறிமுறைகளை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
    புதுடெல்லி:

    ரிக் நாடுகளின் (ரஷியா, இந்தியா, சீனா) வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்ற முத்தரப்பு ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்று ஆலோசனை நடத்தினார். 

    கொரோனா தடுப்பு பணியில் ஒருங்கிணைந்த செயல்பாடு, மூன்று நாடுகளும் பொதுவாக சந்திக்கும் பாதுகாப்பு பிரச்சினைகள், பிராந்திய மற்றும் உலக நிலவரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசுகையில், உலகின் முன்னணி குரல்கள் ஒவ்வொரு வகையிலும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

    சர்வதேச சட்டத்தை மதித்தல், கூட்டாளிகளின் நியாயமான ஆர்வத்தை அங்கீகரித்தல், பலதரப்பு வாதத்தை ஆதரித்தல் மற்றும் பொதுவான நன்மைகளை ஊக்குவித்தல் ஆகியவை நீடித்த உலக ஒழுங்கை உருவாக்குவதற்கான ஒரே வழி என்றும் அவர் வலியுறுத்தினார். ஆனால் எந்த நாட்டின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. 

    இந்த சிறப்புக் கூட்டம், சர்வதேச உறவுகளுக்கான வலுவான கொள்கையில் இந்தியாவின் நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
    Next Story
    ×