என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன: ராகுல் காந்திக்கு ஜெய்சங்கர் விளக்கம்
Byமாலை மலர்18 Jun 2020 6:44 PM IST (Updated: 18 Jun 2020 6:44 PM IST)
லடாக் மோதலின்போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா-சீன எல்லையில் திங்கட்கிழமை இரவு இருதரப்பு படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு படைகளையும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின்போது மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் சிலர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த மோதலில் துப்பாக்கியை வீரர்கள் பயன்படுத்தவில்லை. கற்களை வீசியும், கையில் கிடைத்தவற்றை எடுத்து தாக்கியும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பிலும் சிலர் தண்ணீருக்குள் விழுந்ததாகவும், மறுநாள் உடல்களை மீட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
எல்லை மோதல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். சீனாவுக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், ‘‘இந்திய வீரர்களை கொன்று மிகப்பெரிய குற்றத்தை சீனா செய்துள்ளது. ஆயுதங்கள் இன்றி நிராயுதபாணியாக இந்திய வீரர்களை பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்? இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு?’’ என்றும் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்நிலையில் ராகுலின் கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஜெய்சங்கர் கூறுகையில் ‘‘எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களிடம் எப்போதும் ஆயுதம் இருக்கும். லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலின்போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன. 1996, 2005 ஒப்பந்தங்களின்படி துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தவில்லை’’என்றார்.
Next Story
×