என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஆன்லைன் மூலம் வெங்காயம் வாங்க முயன்று ரூ.80 ஆயிரத்தை பறிகொடுத்த வியாபாரி
Byமாலை மலர்18 Jun 2020 2:50 PM IST (Updated: 18 Jun 2020 2:50 PM IST)
ஆன்லைன் மூலம் வெங்காயம் வாங்க முயன்ற வியாபாரி ரூ.80 ஆயிரத்தை பறிகொடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:
பெங்களூரு நீலச்சந்திராவை சேர்ந்தவர் முகமது சுகேல். இவர், காய்கறி மற்றும் வெங்காய வியாபாரம் செய்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக மார்க்கெட்டுக்கு செல்லாமல் ஆன்லைன் மூலம் வெங்காயம் வாங்கி விற்பனை செய்வதற்கு முகமது சுகேல் முயன்றார். அப்போது ஆன்லைனில் கிடைத்த ஒரு செல்போன் எண் மூலம் வியாபாரி ஒருவரை தொடர்பு கொண்டு அவர் பேசினார். அந்த நபர் தான் மொத்தமாக வெங்காயத்தை அனுப்புவதாகவும், முன்பணமாக வெங்காயத்தின் மொத்த விலையில் 25 சதவீதத்தை மட்டும் தனக்கு முதலிலேயே அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறினார். இதற்கு முகமது சுகேலும் சம்மதித்தார்.
அதன்படி, தான் வாங்கும் வெங்காயத்திற்கான முன்பணமாக ரூ.80 ஆயிரத்தை அந்த நபர் கூறிய வங்கி கணக்குக்கு முகமது சுகேல் அனுப்பி வைத்தார். அதன்பிறகு, அந்த நபரால் முகமது சுகேலை தொடர்பு கொள்ள முடியவில்லை. வெங்காயத்தையும் அந்த நபர் அனுப்பி வைக்கவில்லை. இதனால் அந்த நபர் தன்னிடம் ரூ.80 ஆயிரத்தை வாங்கிவிட்டு வெங்காயத்தை கொடுக்காமல் மோசடி செய்ததை முகமது சுகேல் உணர்ந்தார். இதுகுறித்து மத்திய மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.
பெங்களூரு நீலச்சந்திராவை சேர்ந்தவர் முகமது சுகேல். இவர், காய்கறி மற்றும் வெங்காய வியாபாரம் செய்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக மார்க்கெட்டுக்கு செல்லாமல் ஆன்லைன் மூலம் வெங்காயம் வாங்கி விற்பனை செய்வதற்கு முகமது சுகேல் முயன்றார். அப்போது ஆன்லைனில் கிடைத்த ஒரு செல்போன் எண் மூலம் வியாபாரி ஒருவரை தொடர்பு கொண்டு அவர் பேசினார். அந்த நபர் தான் மொத்தமாக வெங்காயத்தை அனுப்புவதாகவும், முன்பணமாக வெங்காயத்தின் மொத்த விலையில் 25 சதவீதத்தை மட்டும் தனக்கு முதலிலேயே அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறினார். இதற்கு முகமது சுகேலும் சம்மதித்தார்.
Next Story
×