search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெப்பத்தை பரிசோதிக்கும் ஊழியர்
    X
    வெப்பத்தை பரிசோதிக்கும் ஊழியர்

    மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
    கொல்கத்தா:

    சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதி தீவிரமாக உள்ளது.

    இந்நிலையில், மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    இதுதொடர்பாக, அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 24 மணி நேரத்தில் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 087 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும், கொரோனாவுக்கு 12 பேர் பலியானதை தொடர்ந்து, மொத்த எண்ணிக்கை 475 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×