என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கொரோனா பாதிப்பில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா
Byமாலை மலர்11 Jun 2020 10:02 PM IST (Updated: 11 Jun 2020 10:02 PM IST)
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக கடந்த இரண்டு மூன்று நாட்களாக சராசரியாக 10 ஆயிரத்தை தொட்டுள்ளது.
இதனால் 2,89,360 எண்ணிக்கையுடன் ஐந்தாவது இடத்தில் இருந்த ஸ்பெயினை பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. இன்று மாலை நிலவரப்படி இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,93,754 ஆக உயர்ந்ததால் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பிரேசில் 7,75,581 உடன் 2-வது இடத்தில் உள்ளது. இன்று ரஷியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. ரஷியா 5,02,436 எண்ணிக்கையுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா 20,71,495 உடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் மார்ச் 25-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பாதிப்பு 500-க்கு சற்று மேலாக இருந்தது. 10 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
×