search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு இல்லை - பரிசோதனை முடிவில் தகவல்

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு கொரோனா அறிகுறி காணப்பட்ட நிலையில் , அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு இன்று பரிசோதனை நடத்தப்பட்டது.

    ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    இந்த நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் சிங் தனது டுவிட்டர் பதிவில், முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு 7-ந் தேதி பிற்பகல் முதல் இருமலும், காய்ச்சலுக்கான அறிகுறியும் இருந்து வருகிறது. இதனால் டாக்டர்களின் ஆலோசனைப்படி அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார். அவருக்கு 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். அவர் விரைவில் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என சஞ்சய் சிங் கூறி இருந்தார்.

    கொரோன அறிகுறி காணப்பட்டதை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்கு பிறகு கெஜ்ரிவால் அனைத்து சந்திப்புகளையும் ரத்து செய்து இருந்தார்.   

    இந்நிலையில் இன்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை என பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×