search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்ச நீதிமன்றம்
    X
    உச்ச நீதிமன்றம்

    மருத்துவ படிப்பில் ஓபிசி-க்கு 50 சதவீத இடஒதுக்கீடு- உச்ச நீதிமன்றத்தில் அதிமுக மனு

    அகில இந்திய தொகுப்புக்கு தமிழகம் அளிக்கும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்ககோரி அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு தமிழகம் அளிக்கும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி  திமுக சார்பில் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்காக வெளியிடப்பட்டுள்ள முந்தைய நீட் தேர்வு முடிவுகளை ரத்துசெய்ய வேண்டும்.

    அகில இந்திய தொகுப்புக்கு தமிழகம் அளிக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதேபோல  பிற மாநிலங்களில் அந்தந்த மாநில இடஒதுக்கீடு விதிகளைப் பின்பற்ற உத்தரவிடவேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசும் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் மீது 11ம் தேதி விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×