search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    திருப்பதியில் தினமும் 15 ஆயிரம் பக்தர்களை தரிசனத்துக்கு அனுப்ப ஏற்பாடு

    திருப்பதியில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
    திருப்பதி:

    ஊரடங்கு தளர்வுக்கு பின் திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  சோதனை முறையில் 2 நாட்கள் தேவஸ்தான பணியாளர்களும், புதன்கிழமை உள்ளூர் பக்தர்களும், அதனை தொடர்ந்து 11-ந்தேதி வியாழக்கிழமை முதல் ஆன்லைனில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 ஆயிரம் பேரும், கவுண்டர்களில் டிக்கெட் பெற்ற 3 ஆயிரம் பக்தர்கள் என தினமும் 6 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    ஒரு மணி நேரத்தில் எவ்வளவு பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள் என்ற அடிப்படையில் சில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியதாவது:-

    ஒரு மணி நேரத்திற்குள் 500 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சோதனை முறையில் அனுப்பப்பட்டதன் மூலம் நேற்று 2 மணி நேரத்தில் 1200 பக்தர்கள் வரை சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்துள்ளனர்.  இதனால் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பதி கோவில் குறித்து யார் அவதூறாக பேசினாலும், பக்தர்கள் மனம் புண்படும் விதமாக பேசினாலும் சும்மா இருக்க முடியாது. யாராக இருந்தாலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    நடிகர் சிவக்குமார் ஏழுமலையான் கோவிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் தகாத முறையில் நடந்து கொள்வதோடு மது அருந்துவதாகவும், குளிக்காமலேயே சாமி தரிசனம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். அப்படி எந்த ஒரு சூழ்நிலையிலும் நடந்தது கிடையாது.

    நடிகர் சிவக்குமார் பேசிய வீடியோ பழையதாக இருப்பினும் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பக்தர்கள் மனம் புண்படும் விதமாக உள்ளதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
    Next Story
    ×