என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி: தெலுங்கானா முதல்வர் முடிவு
Byமாலை மலர்8 Jun 2020 12:52 PM GMT (Updated: 8 Jun 2020 12:52 PM GMT)
கொரோனா வைரஸ் தொற்றால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த சிரமம் ஏற்பட்டுள்ளதால் மாணவர்களை தேர்வு இன்று தேர்ச்சி பெற்றதாக தெலுங்கானா மாநிலம் அறிவிக்க இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா அச்சத்தால் மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.
பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏறக்குறைய முடிந்து விட்ட காரணத்தால் மார்ச் 25-ந்தேதிக்குப்பிறகு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் ஒரு சில பாடத்தேர்வு மட்டுமே பாக்கி உள்ளது.
இந்நிலையில் தெலுங்கானா மாநில அமைச்சகர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு ‘‘10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார். அத்துடன் பள்ளிக்கூடத் தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்களை வைத்து மாணவர்களின் கிரேடு பிரிக்கப்படும்’’ என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

ஆனால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்காததால் ஒவ்வொரு மாநிலமும் முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. 10-ம் வகுப்பு மார்க் அடிப்படையில்தான் 11-ம் வகுப்பில் மாணவர்கள் எந்த பிரிவை தேர்வு செய்வது என்பது நிர்ணயிக்கப்படும். இதனால் பொதுத்தேர்வை நடத்த பல மாநிலங்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் தேர்வுகளை நடத்த வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தெலுங்கானா மாநில அமைச்சகர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு ‘‘10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார். அத்துடன் பள்ளிக்கூடத் தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்களை வைத்து மாணவர்களின் கிரேடு பிரிக்கப்படும்’’ என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
Next Story
×