search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி
    X
    விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி

    வந்தே பாரத் திட்டம் மூலம் 65 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்- ஹர்தீப் சிங் பூரி

    வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சுமார் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

    இதையடுத்து, பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

    இந்நிலையில், வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சுமார் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மூன்றாவது கட்டத்தில் 311-க்கும் அதிகமான விமானங்கள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்தியர்கள் தாயகம் திரும்ப ஏதுவாக கூடுதலாக விமானங்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

    மேலும், இதுவரை 640 தனிப்பட்ட விமான சேவைகளுக்கு அனுமதி வழங்கியதன் மூலம், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் என விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×