என் மலர்

  செய்திகள்

  கொரோனா பாதிப்பு
  X
  கொரோனா பாதிப்பு

  இந்தியாவில் 2.46 லட்சம் பேருக்கு கொரோனா: பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்குகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,46,628 ஆக உயர்ந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 6929 ஆக அதிகரித்துள்ளது.
  இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன.

  இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,46,628 ஆக உயர்ந்துள்ளது.

  கடந்த 24 மணி நேரத்தில் 287 பேர் பலியாகியுள்ளதால் உயிரிழப்பு 6929 ஆக அதிகரித்துள்ளது. 1,19,293 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5, 220 பேர் குணமடைந்துள்ளனர்.
  Next Story
  ×