என் மலர்

  செய்திகள்

  பிரதமர் மோடி
  X
  பிரதமர் மோடி

  கொரோனா தடுப்பு நடவடிக்கை - ருவாண்டா அதிபருடன் பிரதமர் மோடி போனில் பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ருவாண்டா அதிபர் பால் ககாமேவுடன் பிரதமர் மோடி போனில் பேசினார்.
  புதுடெல்லி:

  சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

  இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ருவாண்டா அதிபர் பால் ககாமேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.

  இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி ருவாண்டா அதிபர் பால் ககாமேவுடன் தொலைபேசியில் உரையாடினார். கொரோனாவுக்கு எதிராக போராட இரு நாடுகளும் முழு பலத்தை வழங்க ஒப்புக்கொண்டன என பதிவிட்டுள்ளார்.

  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி தொடர்ந்து தொலைபேசியில் பேசிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×