search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவேந்திர பட்நாவிஸ், உத்தவ் தாக்கரே
    X
    தேவேந்திர பட்நாவிஸ், உத்தவ் தாக்கரே

    பரிசோதனை எண்ணிக்கையை உயர்த்துங்கள்: உத்தவ் தாக்கரேவுக்கு முன்னாள் முதல்வர் கடிதம்

    தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யும் வசதி இருந்தும் மும்பையில் 3500 முதல் 4000 பரிசோதனைகள் மட்டுமே செய்யப்படுவதாக தேவேந்திர பட்நாவிஸ் கவலை தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. நேற்றைய நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் 74,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2587 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதில் பாதிக்கும் மேற்பட்டோர் மும்பையை சேர்ந்தவர்கள். மக்கள் அடர்த்தியாக உள்ள இடங்களில் பரிசோதனையை அதிகரித்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களை உடனே கண்டறித்து நோயின் தாக்கத்தை தடுக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

    மும்பையில் நாள்தோறும் 4000-த்திற்கும் குறைவான பரிசோதனைகளே செய்யப்படுவதாக தெரிகிறது. இந்நிலையில் பரிசோதனையை அதிரிகக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தற்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்தக் கடிதத்தில் தேவேந்திர பட்நாவிஸ் ‘‘மும்பையில் பரிசோதனைகள் குறைந்து வருவதும், பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. மும்பையில் உள்ள ஆய்வகங்கள் மூலம் 10 ஆயிரம் மாதிரிகளை சோதனை செய்ய முடியும். ஆனால் நான் ஒன்றுக்கு 3500 முதல் 4000 ஆயிரம் வரைதான் பரிசோதனை செய்யப்படுகிறது’’ என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×