என் மலர்

  செய்திகள்

  சத்தியநாராயணாவை மருத்துவமனைக்கு கொண்டு வந்த மக்கள்
  X
  சத்தியநாராயணாவை மருத்துவமனைக்கு கொண்டு வந்த மக்கள்

  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பிரமுகருக்கு கத்திக்குத்து- மருத்துவமனையில் அனுமதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
  விசாகப்பட்டினம்:

  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், விசாகா பால் உற்பத்தி நிறுவன இயக்குனருமான சத்தியநாராயணா நேற்று இரவு விசாகப்பட்டினம் அருகே உள்ள கொம்மல்புடி கிராமத்தில் தனக்கு தெரிந்த நபர்கள் இரண்டு பேருடன் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அப்போது அவர்களை சுற்றி வளைத்த மர்ம நபர்கள் கத்தியால் தாக்கத் தொடங்கினர்.

  சத்தியநாராயணாவுடன் வந்த 2 பேரும் லேசான காயங்களுடன் தப்பி ஓடினர். சத்தியாநாராயணாவை அந்த கும்பல் தொடர்ந்து கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சத்தியநாராயணாவை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

  சத்தியநாராயணா அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், அவர் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
  Next Story
  ×