search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    ஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை - பிரதமர் மோடி இவ்வாறு கூறினாரா?

    பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதாக கூறினாரா என தொடர்ந்து பார்ப்போம்.



    பிரதமர் நரேந்திர மோடி மன் கீ பாத் நிகழ்ச்சியின் போது ஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்தார் என கூறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் படம் தனியார் செய்தி நிறுவனத்தின் செய்தி அடங்கிய ஸ்கிரீன்ஷாட் ஆகும்.

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில் செப்டம்பர் 2018 முதல் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் திட்டத்தின் கீழ் பயன்பெற்றோரின் எண்ணிக்கையை பிரதமர் மோடி தெரிவித்தார் என தெரியவந்துள்ளது. பின் தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் பிழை ஏற்பட்டதும், அதற்கு திருத்த செய்தியை அந்நிறுவனம் வெளியிட்டதும் தெரியவந்தது.

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    அந்த வகையில் வைரல் பதிவுகளில் உள்ள விவரங்களில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது. இந்தியாவில் ஜூன் 1, 2020 வரை 1,90,535 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் 5167 பேர் உயிரிழந்துள்ளனர். தற்சமயம் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா எட்டாவது இடம் பிடித்திருக்கிறது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×