search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி, ராகுல்காந்தி
    X
    பிரதமர் மோடி, ராகுல்காந்தி

    ‘மான் கி பாத்’துக்கு போட்டியாக ராகுல்காந்தியின் உரை சமூக வலைதளத்தில் வெளியிட திட்டம்

    பிரதமர் மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சிக்கு போட்டியாக ராகுல்காந்தியின் உரையை சமூக வலைதளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் (மனதின் குரல்) என்ற உரையை ஒவ்வொரு மாதமும் நிகழ்த்தி வருகிறார். இது வானொலியில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இந்த உரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

    இதேபோன்ற ஒரு நிகழ்ச்சியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்.

    பிரதமர் மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சி


    ராகுல்காந்தி ஏற்கனவே பேஸ் புக் மற்றும் டுவிட்டர் தளங்களை பயன்படுத்தி வருகிறார். அதில் டுவிட்டரில் 14 லட்சத்து 40 ஆயிரம் பேரும், பேஸ்புக்கில் 3 லட்சத்து 20 ஆயிரம் பேரும் பின் தொடர்பவர்களாக (பாலோவர்ஸ்) உள்ளனர்.

    டுவிட்டர் தளத்தில் சமீபத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து அவர் பல்வேறு கருத்துக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டார். இது நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு அவற்றையும் வெளியிட்டார்.

    இதேபோன்ற ஒரு நிகழ்ச்சியை தொடர்ந்து சமூக வலைதளத்தில் வெளியிட ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். அதாவது பிரதமரின் மான் கி பாத்துக்கு போட்டியாக இது வெளிவரும்.

    அதில் அவருடைய உரை மட்டும் அல்லாமல் அவர் பங்கேற்கும் கலந்துரையாடல்களும் இடம்பெற செய்ய இருக்கிறது. இது விரைவில் வெளிவர இருப்பதாக கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×