search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலச்சரிவு ஏற்பட்ட குடியிருப்பு பகுதியில் மீட்பு பணி
    X
    நிலச்சரிவு ஏற்பட்ட குடியிருப்பு பகுதியில் மீட்பு பணி

    அசாமில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள்- 20 பேர் உயிரிழப்பு

    அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், மழை தொடர்பான விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மழை வெள்ளத்தால் மொத்தம் 3.72 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமடைந்துள்ளன. கோல்பாரா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    நிலச்சரிவு

    இந்நிலையில், மழை காரணமாக இன்று பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு குடியிருப்புகளை மூழ்கடித்துள்ளது. சச்சார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேரும், ஹைலகண்டியில் 7 பேரும், கரிம்கஞ்ச் மாவட்டத்தில் 6 பேரும் பலியாகி உள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
    Next Story
    ×