என் மலர்

  செய்திகள்

  பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்
  X
  பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்

  ஜம்மு காஷ்மீரில் தொடரும் பாகிஸ்தானின் அத்துமீறல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
  ஸ்ரீநகர்:
   
  ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து முகாம்களை அழித்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

  இந்நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

  ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மான்கோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

  கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவும் தொடர்ந்து பதிலடி தாக்குதல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×