search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை
    X
    அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை

    மராட்டியம், குஜராத்தை தாக்க இருக்கும் நிசார்கா புயல்: அமித் ஷா அவசர ஆலோசனை

    நாளைமறுநாள் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களை புயல் தாக்க இருக்கும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
    தென்மேற்கு பருவமழை இன்று கேரளாவில் தொடங்கியது. இதன் காரணமாக திருவனந்தபுரம் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது.

    தென்கிழக்கு மற்றும் அருகிலுள்ள கிழக்கு - மத்திய அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘நிசார்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

    நிசார்கா நாளைமறுநாள் (ஜூன் 3-ந்தேதி) மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 9 தேசிய பேரிடர் மீட்புப்படை குவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் 3 குழுக்களும், பல்காரில் இரண்டு குழுக்களும், தானே, ரெய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் பகுதியில் தலா ஒரு பேரிடர் குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.
    Next Story
    ×