search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரகாஷ் ஜவடேகர்
    X
    பிரகாஷ் ஜவடேகர்

    சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி நிவாரண சலுகைகளுக்கு ஒப்புதல் - பிரகாஷ் ஜவடேகர்

    சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கான நிவாரண சலுகைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
    மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கியமான விஷயங்கள் குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    * சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடிக்கு நிவாரண சலுகைகள்

    * ரூ.50 கோடி வரை முதலீடு உள்ள நிறுவனங்களுக்கும் சிறு தொழில்களுக்கான சலுகை வழங்கப்படும்

    * மத்திய அமைச்சரவை முடிவுகள் மூலம் சிறு, குறு தொழில் நிறுவனங்களில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யப்பட வாய்ப்பு

    * விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் 14 விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு

    இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
    Next Story
    ×