search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப சிதம்பரம்
    X
    ப சிதம்பரம்

    ரிசர்வ் வங்கியின் 7.75 சதவீத பத்திரங்கள் நிறுத்தம்: ப.சிதம்பரம் கண்டனம்

    ரிசர்வ் வங்கியின் 7.75 சதவீத பத்திரங்களை மத்திய அரசு திடீரென்று நிறுத்தியதை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
    சென்னை :

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

    ரிசர்வ் வங்கியின் 7.75 சதவீத பத்திரங்களை மத்திய அரசு திடீரென்று நிறுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன். சேமிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு, நியாயமான வட்டி வருமானம் தரக்கூடிய ஒரு சேமிப்பு பத்திரத்தைத் தரவேண்டியது அரசுடைய கடமை. வரியைக் கழித்தால் இதில் வருமானம் 4.4 சதவீதம் மட்டுமே. 2003-ம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியின் பத்திரம் அத்தகைய சாதனமாக இருந்து வந்தது. பொது வைப்பு நிதி, சிறு சேமிப்பு ஆகியவற்றின் வட்டியை அரசு குறைத்தது.

    இப்போது ரிசர்வ் வங்கி பத்திரங்களை அறவே ஒழித்துவிட்டது. இது நடுத்தர மக்களின் மீது விழுந்துள்ள இன்னொரு பலத்த அடி. 2018-ம் ஆண்டு ஜனவரியில் இதை செய்தார்கள். நான் கண்டனம் தெரிவித்தேன். மறுநாளே அரசு தன் நடவடிக்கையை விலக்கி கொண்டது. இப்போது மீண்டும் ரத்து செய்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கையை எதிர்த்து மக்கள் குரல் கொடுக்க வேண்டும். சமூக வலைத்தலங்களில் உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×