search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    ஜூலை மாதத்துக்குள் தினசரி பரிசோதனை எண்ணிக்கையை 5 லட்சமாக அதிகரிக்க திட்டம்

    வருகிற ஜூலை மாதத்துக்குள் தினமும் 5 லட்சம் பரிசோதனை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் தற்போது கொரோனா பரிசோதனை மிகக்குறைந்த நபர்களுக்கே நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக சராசரியாக 1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே சோதனை நடத்தப்படுகிறது. 600-க்கும் மேற்பட்ட பரிசோதனை கூடங்கள் மூலம் இந்த பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பரிசோதனை செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையை கணிசமான அளவுக்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    தற்போது உள்ளதைவிட ஜூலை மாதத்துக்குள் தினசரி கொரோனா பரிசோதனையை 5 மடங்காக உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தினமும் 5 லட்சம் சாம்பிள்களை பரிசோதனைகள் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×