search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    பள்ளிகளை திறக்க பலே ஐடியா - வைரலாகும் ராகுல் காந்தி ட்வீட்

    கொரோனா ஊரடங்கின் மத்தியில் பள்ளிகளை திறக்க ராகுல் காந்தி ட்விட்டரில் ஐடியா கொடுத்ததாக தகவல் வைரலாகி வருகிறது.



    ராகுல் காந்தி பதிவிட்ட ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் ட்வீட் ஸ்கிரீன்ஷாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களை கடுப்பேற்றும் விதமாக பள்ளிகளை ஒற்றைப்படை இரட்டைப்படை முறையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் திறக்கலாம் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது. 

    இந்தியாவில் நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. பொது ஊரடங்கு மே 31 ஆம் தேதி நிறைவுறுகிறது. எனினும், அதன்பின் பள்ளி, கல்லூரிகளை திறப்பது சந்தேகம் தான் என தெரிகிறது. ஊரடங்கை சிறப்பாக செயல்படுத்துவதில் மத்திய அரசு தோற்றுவிட்டதாக ராகுல் காந்தி ஏற்கனவே குற்றஞ்சாட்டி இருந்தார்.

    வைரலாகும் ராகுல் காந்தி ட்வீட் ஸ்கிரீன்ஷாட்

    வைரல் ஸ்கிரீன்ஷாட்களை ஆய்வு செய்ததில், அதனை ராகுல் காந்தி பதிவிடவில்லை என தெரியவந்துள்ளது. இதுபற்றி ட்விட்டரில் மேற்கொள்ளப்பட்ட தேடலில் ராகுல் காந்தி வைரல் ஸ்கிரீன்ஷாட்டில் இருப்பது போன்ற ட்வீட் எதுவும் அவரது டைம்லைனில் கிடைக்கப்பெறவில்லை.

    இதுதவிர ராகுல் காந்தி பதிவிட்டதாக வைரலாகும் ட்வீட் பற்றி எந்த செய்தியும் இதுவரை வெளியாகவில்லை. அந்த வகையில் வைரல் ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள தகவல்களை ராகுல் காந்தி தெரிவிக்கவில்லை என உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×