search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தமிழ்நாட்டில் மகாராஷ்டிராவில் இருந்து வருபவர்களால் கொரோனா தொற்று அதிகரிப்பு

    வெளிமாநிலங்களில் இருந்து சொந்த மாநிலத்திற்கு திரும்புபவர்களாலும் அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்படுகிறது. தமிழ்நாட்டிலும் இதே நிலைமை உருவாகி உள்ளது.

    புதுடெல்லி:

    வெளிநாட்டில் சிக்கி உள்ளவர்களை வந்தே பாரத் திட்டத்தின் அடிப்படையில் விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வருகிறார்கள்.

    இவ்வாறு வந்தவர்களில் பலர் பல மாநிலங்களில் தோற்று அதிகரிப்புக்கு காரணமாக இருக்கிறார்கள்.

    அந்த வகையில் மே 7-ந்தேதிக்கு பிறகு கேரளாவுக்கு இதுவரை 10 ஆயிரத்து 11 பேர் வந்துள்ளனர். அவர்களில் 151 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டுக்கு 8 ஆயிரத்து 230 பேர் வந்துள்ளனர். அவர்களில் 81 பேருக்கு தொற்று உள்ளது. கர்நாடகாவுக்கு திரும்பியவர்களில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

    ஆந்திராவுக்கு 1169 பேர் வந்துள்ளனர். அதில் 62 பேருக்கு தொற்று இருக்கிறது. இதேபோல மத்தியபிரதேசத்திற்கு வந்தவர்களில் 48 பேருக்கும், தெலுங்கானாவுக்கு வந்தவர்களில் 28 பேருக்கும், அரியானாவுக்கு வந்தவர்களில் 22 பேருக்கும், ஒடிசாவுக்கு வந்தவர்களில் 8 பேருக்கும், பஞ்சாப்புக்கு வந்தவர்களில் 4 பேருக்கும், அசாம் வந்தவர்களில் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

    அதுமட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்து சொந்த மாநிலத்திற்கு திரும்புபவர்களாலும் அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்படுகிறது. தமிழ்நாட்டிலும் இதே நிலைமை உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 805 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதித்தவர்களில் எண்ணிக்கை 17 ஆயிரத்து 82 ஆக உயர்ந்தது.

    இந்த 805 பேரில் 93 பேர் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு திரும்பியவர்கள் ஆவர். இதில் மகாராஷ்டிராவில் இருந்து வந்த 87 பேருக்கு நோய் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அதாவது கடந்த 9-ந்தேதிக்கு பிறகு வெளி மாநிலத்தில் இருந்து தங்கள் ஊருக்கு சாலை மற்றும் ரெயில் மார்க்கமாக வந்தவர்களால் நோய் பாதிப்பு அதிகரித்திருக்கிறது.

    தமிழ்நாட்டில் உள்ள மொத்த நோயாளிகளில் சுமார் 5 சதவீதம் பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களாக உள்ளனர். அந்த வகையில் மே 9-ந்தேதிக்கு பிறகு மகாராஷ்டிராவில் இருந்து வந்த 726 பேருக்கும், குஜராத்தில் இருந்து வந்த 21 பேருக்கும், டெல்லியில் இருந்து வந்த 15 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் இருந்து வந்த 19 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

    தற்போது விமான போக்கு வரத்து தொடங்கி உள்ளது. தினமும் 25 விமானங்கள் வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வருகின்றன. அந்த பயணி கள் மூலமும் மேலும் பாதிப்பு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×