search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முழு ஊரடங்கு
    X
    முழு ஊரடங்கு

    ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு 2 மாதங்களுக்கு நீட்டிப்பு: கர்நாடக அரசு திட்டம்

    மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளதால் ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கை 2 மாதங்களுக்கு நீட்டிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கடந்த மார்ச் 25-ந் தேதி அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு தற்போது வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெருமளவில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் பஸ் உள்பட அனைத்து வகையான போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான தொழில் நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளன.

    மேலும் வருகிற 31-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை நாளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் முதல்முறையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. வாகன ஓட்டமோ அல்லது மக்களின் நடமாட்டமோ இருக்கவில்லை. மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

    முழு ஊரடங்கிற்கு மக்கள் அளித்துள்ள வரவேற்பை கண்டு அரசு திருப்தி அடைந்துள்ளது. இதேபோல் ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கை அடுத்த 2 மாதங்களுக்கு நீட்டிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை நாளில் மக்கள் “ஷாப்பிங்“ செய்ய அதிகளவில் வெளியில் வருவது வழக்கம். இதன் மூலம் கொரோனா அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளது என்று அரசு கருதுகிறது. அதனால் முழு ஊரடங்கை நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
    Next Story
    ×