search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஷ்ராமிக் சிறப்பு ரெயில்கள் மூலம் 40 லட்சம் பேர் பயன் - இந்திய ரெயில்வே

    ஷ்ராமிக் சிறப்பு ரெயில்கள் மூலமாக 40 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக, பல்வேறு நகரங்களில் இருந்து ஷ்ராமிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்கள் மூலம் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது வரை 3 ஆயிரத்து 60 ஷ்ராமிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    மேலும், ஊரடங்கு காலத்தில் இயக்கப்பட்ட இந்த ரெயில்கள் மூலமாக இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்றடைந்துள்ளனர் என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கோப்பு படம்

    அதிக எண்ணிக்கையிலான சிறப்பு ரெயில்கள் பயணத்தை தொடங்கிய மாநிலம் (புறப்பட்ட இடம்):-

    குஜராத் - 853 ரெயில்கள் 
    மகாராஷ்டிரா - 550 ரெயில்கள்
    பஞ்சாப் - 333 ரெயில்கள்
    உத்தரபிரதேசம் - 221 ரெயில்கள்
    டெல்லி - 181 ரெயில்கள்

    அதிக எண்ணிக்கையிலான சிறப்பு ரெயில்கள் பயணத்தை முடித்த மாநிலம் (சேரும் இடம்):-
       
    உத்தரபிரதேசம் - 1,245 ரெயில்கள்
    பீகார் - 846 ரெயில்கள்
    ஜார்க்கண்ட் - 123 ரெயில்கள்
    மத்திய பிரதேசம் - 112 ரெயில்கள்
    ஒடிசா - 73 ரெயில்கள்
    Next Story
    ×