search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு ரெயில் மூலம் ஊர் திரும்பிய பயணிகள் (கோப்பு படம்)
    X
    சிறப்பு ரெயில் மூலம் ஊர் திரும்பிய பயணிகள் (கோப்பு படம்)

    சிறப்பு ரெயில்களுக்கு 26ம் தேதி வரை தடை விதித்தது மேற்கு வங்காளம்

    மேற்கு வங்காள மாநிலத்திற்குள் சிறப்பு ரெயில்கள் வருவதற்கு 26ம் தேதி வரை மாநில அரசு தடை விதித்துள்ளது.
    கொல்கத்தா:

    ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக ஷ்ராமிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்திற்குள் சிறப்பு ரெயில்கள் வருவதற்கு வரும் 26ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய அம்பன் புயல் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ரெயில்வே வாரியத்திற்கு மாநில தலைமைச் செயலாளர் ராஜீவா சின்கா கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ‘அடுத்த சில நாட்களுக்கு ரெயில்களை பெறுவதற்கு சாத்தியம் இல்லை. எனவே, மே 26ம் தேதி வரை எந்த ரெயிலையும் மேற்கு வங்காளத்திற்கு அனுப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்’ என கூறியுள்ளார்.

    Next Story
    ×