search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தந்தையை அமரவைத்து சைக்கிள் ஓட்டிய சிறுமி
    X
    தந்தையை அமரவைத்து சைக்கிள் ஓட்டிய சிறுமி

    தந்தையுடன் 1,200 கி.மீ. சைக்கிள் ஓட்டிய சிறுமியின் தலை எழுத்தே மாறப்போகிறது

    கொரோனாவால் வாழ்விழந்த தந்தையுடன் 1,200 கி.மீ. சைக்கிள் ஓட்டிய சிறுமியின் தலை எழுத்தே மாறப்போகிறது.
    பீகார்:

    கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகெங்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தாலும், மறைமுகமாக பலருடைய வாழ்க்கைப்பாதையையே மாற்றிப்போட்டு விட்டது என்னவோ உண்மைதான்.

    வாழ்வாதாரம் இழந்த நிலையில் இருப்பதைக் கொண்டு பலரும் வாழப்பழகிக்கொண்டு விட்டனர். ஊரடங்கால் குடும்ப உறவுகள் வலுப்பட்டிருக்கின்றன. பிரிந்த நண்பர்கள் ஆன்லைனில் தொடர்பு கொண்டு நட்பை புதுப்பிக்கின்றனர். சோதனைகளால் சிலர் சாதனைகள் படைக்கிறார்கள்.

    இந்த வரிசையின் கடைசிபிரிவில் சேருகிறார், பீகாரை சேர்ந்த 15 வயது சிறுமி ஜோதி குமாரி. 8-ம் வகுப்பு மாணவி.

    இந்த சிறுமி, தனது தந்தை மோகன் பஸ்வானுடன் அரியானா மாநிலம் குர்கானில் (குருகிராம்) வசித்து வந்தார்.

    மோகன் பஸ்வான், ஆட்டோ டிரைவராக இருந்து வந்தார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்தார். ஒரு விபத்திலும் சிக்கி காயம் அடைந்தார். அவரிடம் இருந்த ஆட்டோ ரிக்‌ஷாவை அதன் உரிமையாளர் திரும்ப பெற்றுக்கொண்டார்.

    இனி என்ன செய்வது என விதியை நொந்தவாறு யோசித்த அவர், 1,200 கி.மீ. தொலைவில் பீகாரில் உள்ள சொந்த கிராமத்துக்கு திரும்பி அங்கேயே பிழைப்பைத் தேடிக்கொள்வது என முடிவு செய்தார்.

    கையில் இருந்த பணத்தைக்கொண்டு மகளிடம் ஒரு சைக்கிள் வாங்கித்தந்தார்.

    தந்தையை சைக்கிளின் பின்னால் அமர வைத்துக்கொண்டு, ஜோதி குமாரி கடந்த 10-ந்தேதி குர்கானில் சைக்கிளை எடுத்தார். 7 நாட்கள் இரவும், பகலும் தொடர் சவாரிக்கு பின்னர் கடந்த 16-ந் தேதி பீகாரில் உள்ள சொந்த கிராமத்துக்கு தந்தையுடன் சென்றடைந்தார்.

    தந்தையுடன் சிறுமி


    1,200 கி.மீ. தொலைவுக்கு தனது தந்தையை பின்னால் ஏற்றிக்கொண்டு ஒரு சிறுமி சைக்கிள் ஓட்டி இருக்கிறார் என்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி விட்டது.

    இதுபற்றி டெல்லியில் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள உள்ள தேசிய சைக்கிளிங் பெடரேசன் அறிந்து அதிர்ந்துபோனது. அதெப்படி ஒரு சிறுமிக்கு இது சாத்தியமாயிற்று என்று வியந்தும் போனது.

    இப்போது சிறுமி ஜோதிகுமாரியை அழைத்து அவரது சைக்கிள் ஓட்டும் திறனை சோதித்துப்பார்ப்பது என்று முடிவு செய்திருக்கிறது, இந்திய விளையாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் இந்த அமைப்பு.

    இதுபற்றி இந்த அமைப்பின் தலைவர் ஓங்கர் சிங் சொல்லும்போதே வியந்து போகிறார்....

    “ஒரு எட்டாம் வகுப்பு மாணவி இதை செய்திருக்கிறார் என்றால் அது வியக்க வைக்கிறது. அந்தச் சிறுமியிடம் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். இல்லையென்றால் 1,200 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் ஓட்டுவது என்பது சாதாரணமானது அல்ல. அந்தச்சிறுமியிடம் அதற்கான வலிமை, உடல்வாகு இருக்க வேண்டும். எங்களிடம் உள்ள கணினிமயமாக்கப்பட்ட சைக்கிளில் அந்த சிறுமியை அமர வைத்து சோதிப்போம். நாங்கள் தேர்ந்தெடுக்கும் 7 அல்லது 8 அம்சங்களில் அவர் தேர்ச்சி பெறுகிறாரா என்று பார்ப்போம். தேர்ச்சி பெற்று விட்டால், ஜோதிகுமாரி பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்க முடியும். ஏற்கனவே எங்களிடம் 14, 15 வயதில் 10 வீரர்கள் இருக்கிறார்கள். இளம் வீரர்களை நாங்கள் வளர்த்தெடுக்க விரும்புகிறோம். 
    Next Story
    ×