search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொனால்ட் டிரம்ப்
    X
    டொனால்ட் டிரம்ப்

    அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கொரோனா வைரஸ் - நெட்டிசன்களை நம்ப வைக்கும் வைரல் வீடியோ

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று நெட்டிசன்களை நம்ப வைத்திருக்கிறது.



    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரபல செய்தி நிறுவனத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 11 நொடிகள் ஓடும் வைரல் வீடியோவில் செய்தியாளர் டிரம்ப்புக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.

    ஆய்வு செய்ததில், வைரல் வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. உண்மையில் செய்தி நிறுவன வீடியோவில் வாலெட் எனும் வார்த்தைக்கு பதில் டெஸ்ட்ஸ் எனும் வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. வைரல் வீடியோவின் உண்மை பதிப்பு மே 7 ஆம் தேதி செய்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    வைரல் பதிவு - உண்மை பதிவு ஸ்கிரீன்ஷாட்

    மேலும் மே 7 ஆம் தேதி அமெரிக்க கடற்படை அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறும் வீடியோவும் அதே சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இவைதவிர அதிபர் டிரம்ப்புக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை கூறும் செய்தி தொகுப்பு எதுவும் இணையத்தில் கிடைக்கவில்லை.  

    செய்தி நிறுவன முக்கிய செய்தியில் ஒரு வார்த்தை மாற்றப்பட்டது நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. அந்த வகையில் வைரல் வீடியோவில் உள்ளது போன்று அதிபர் டிரம்ப்புக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதியாகிவிட்டது.  

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×