search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபானங்கள்
    X
    மதுபானங்கள்

    கேரளாவில் பஸ் கட்டணம் 50 சதவீதம் உயர்வு- மதுபானங்கள் விலையும் அதிகரிப்பு

    கேரளாவில் பஸ் கட்டணம் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுபானங்களுக்கு 10 முதல் 35 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள போக்குவரத்து துறை மந்திரி சசீந்திரன் கூறும்போது, கேரளாவில் இன்று முதல் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளோம். டிக்கெட் கட்டணம் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    தனியார் பஸ் நிறுவனங்கள் கூறுவது போல 100 சதவீத கட்டண உயர்வை அறிவிக்க முடியாது. பயணிகள் மீது அதிக சுமையை ஏற்றக்கூடாது. அதே நேரம் பஸ் அதிபர்களும் பாதிக்கப்படக்கூடாது. இதற்காக அவர்களுக்கு வரி சலுகைள் அறிவித்து உள்ளோம், என்றார்.

    கேரளாவில் மது கடைகள் நாளை திறக்கப்பட உள்ளது. மது பானங்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் டோக்கன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மது வாங்க விரும்புவோர் அதற்கான ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் பதிவு செய்தால் டிஜிட்டல் டோக்கன் வழங்கப்படும்.

    டோக்கன் பெற்றுக்கொண்ட 24 மணி நேரத்தில் அருகில் உள்ள ஏதாவது ஒரு மதுக்கடைக்கு சென்று மது வாங்கி கொள்ளலாம் என்று அரசு அறிவித்து உள்ளது. இதன்மூலம் மது கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது என்றும் கூறப்பட்டு உள்ளது.

    இதுபோல மது பானங்களுக்கு 10 முதல் 35 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பிராந்தி, விஸ்கி, ரம் வகைகள் பாட்டிலுக்கு குறைந்தபட்சம் ரூ. 90 முதல் அதிகபட்சம் ரூ.150 வரை உயரும்.

    இதன்மூலம் ரூ.1290-க்கு விற்பனை ஆன ரம் இனி ரூ. 1440-க்கு விற்கப்படும். ரூ.820-க்கு விற்கப்பட்ட சாதாரண ரக பிராந்தி இனி ரூ.90 உயர்ந்து ரூ.910-க்கு விற்கப்படும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×