search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் சிக்கிய வேன்
    X
    விபத்தில் சிக்கிய வேன்

    மார்க்கெட்டுக்கு சென்ற 6 விவசாயிகள் சாலை விபத்தில் பலி

    உத்தர பிரதேசத்தில் மினி வேனும் லாரியும் மோதிய விபத்தில் 6 விவசாயிகள் உயிரிழந்தனர்.
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் எட்டாவா நகரின் பிரண்ட்ஸ் காலனி பகுதியில் நேற்று இரவு மினி வேனும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மினிவேனில் இருந்த 6 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விவசாயிகள் பலாப்பழங்களை சந்தையில் விற்பனை செய்வதற்காக மினிவேனில் மார்க்கெட்டுக்கு சென்றபோது விபத்தில் சிக்கி உள்ளனர். 
    Next Story
    ×