search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தி
    X
    சோனியா காந்தி

    சோனியா காந்தி தலைமையில் மே 22ல் எதிர்க்கட்சிகள் கூட்டம்

    புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சிரமங்கள் குறித்து விவாதிக்க மே 22-ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சிரமங்கள் குறித்து விவாதிக்க மே 22-ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்தக் கூட்டத்துக்கு சோனியா காந்தி தலைமை வகிக்கிறார். பிற்பகல் 3 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இக்கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்க்கண்ட் முதல் மந்திரியுமான ஹேமந்த் சோரன், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் உள்பட 15-க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
    Next Story
    ×