search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொனால்ட் டிரம்ப்
    X
    டொனால்ட் டிரம்ப்

    உலகை அச்சுறுத்தி வந்த பயங்கரவாதியுடன் டொனால்ட் டிரம்ப் - வைரலாகும் புகைப்படம்

    உலகை அச்சுறுத்தி வந்த பயங்கரவாதியுடன் டொனால்ட் டிரம்ப் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

     

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இளமை காலகட்டத்தில் உலகை அச்சுறுத்தி வந்த பயங்கரவாதியான ஒசாமா பின் லேடனுடன் கைகுலுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் இருவரும் சிரிக்கின்றனர். 

    வைரல் புகைப்படத்துடன் எழுதப்பட்ட தலைப்பில், “எனக்கு ஒசாமா பின் லேடனை தெரியும். மக்கள் அவரை விரும்பினார்கள். அவர் தலைசிறந்த நபர். அவர் மிக உயரிய நோக்கத்திற்காக உயிரை விட்டார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


    வைரல் புகைப்படம்

    ஆய்வு செய்ததில், வைரலாகும் புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த புகைப்படம் அமெரிக்க வெளியீட்டாளர் எஸ்ஐ நியூஹவுஸ் ஜூனியரை நியூ யார்க் நகரில் 1987 ஆண்டு சந்தித்த போது எடுக்கப்பட்டது ஆகும்.

    வைரல் புகைப்படம் உண்மையென நம்பி பலர் அதனை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் வைரல் புகைப்படம் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது. 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. 
    Next Story
    ×