search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதார் கார்டு
    X
    ஆதார் கார்டு

    டாஸ்மாக்கில் மது வாங்க ஆதார் தேவையில்லை- உச்சநீதிமன்றம்

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வருவோர் ஆதார் கார்டு கொண்டு வரத்தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    தமிழகத்தில் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தது.

    டாஸ்மாக் தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், கடைகளை மூடும்படி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது.

    இதையடுத்து, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளில் மது வாங்க சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்க டாஸ்மாக் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளை தவிர பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படுகிறது.

    உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறப்பு இல்லை.

    இந்நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வருவோர் ஆதார் கார்டு கொண்டு வரத்தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மதுக்கடைகளுக்கு வருவோர் ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாட்டை உச்சநீதிமன்றம் தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.
    Next Story
    ×