search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தி
    X
    சோனியா காந்தி

    மத்திய அரசு 17-ந் தேதிக்கு பிறகு என்ன செய்யப்போகிறது?: சோனியாகாந்தி கேள்வி

    கொரோனாவின் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வருகிற 17-ந் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அதன்பிறகு மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
    புதுடெல்லி :

    கொரோனா பாதிப்பால் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், ‘‘கொரோனாவின் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வருகிற 17-ந் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அதன்பிறகு மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? என்ன உத்திகளை வைத்து இருக்கிறது. அதன்பிறகும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்கப்போகிறதா? அதற்கு என்ன வரைமுறையை வைத்து இருக்கிறது? என்பது தெரிய வேண்டும்’’ என்று கூறினார்.

    ராகுல் காந்தி பேசுகையில், ‘‘கொரோனா தொற்றில் இருந்து முதியோர், நீரிழிவு நோயாளிகள், இருதய நோயாளிகளை பாதுகாக்க என்ன திட்டம் உள்ளது என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

    ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் பேசுகையில், தங்கள் மாநிலத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், மாநிலங்கள் பிரதமரை பலமுறை கேட்டுக் கொண்டும் மத்திய அரசு இதுவரை நிதி உதவி திட்டத்தை அறிவிக்கவில்லை என்றும் கூறினார்.
    Next Story
    ×