search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலி வலைதள ஸ்கிரீன்ஷாட்
    X
    போலி வலைதள ஸ்கிரீன்ஷாட்

    இதை செய்தால் அரசு திட்டத்தின் கீழ் ரூ. 50 ஆயிரம் பெற முடியுமா?

    சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் இதை செய்தால் ரூ. 50 ஆயிரம் பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.



    கொரோனா நோய் தொற்று பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் மக்களுக்கு வழங்க ரூ. 1.7 லட்சம் கோடி நிதி ஒதுக்குவதாக மத்திய அரசு மார்ச் 26 ஆம் தேதி அறிவித்தது. 

    இந்நிலையில், "rsby.org" எனும் வலைதளத்தில் மத்திய அரசு நாட்டில் உள்ள ரேஷன் கார்டு பயனர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரண நிதியினை ராஷ்ட்ரிய ஷிக்ஷீத் பெரோஜர் யோஜனா எனும் திட்டத்தின் கீழ் வழங்க இருப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வலைதளம் மத்திய அரசு சார்பில் உருவாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் முதலில் விண்ணப்பிக்கும் 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் இந்த தொகை ஆன்லைன் மூலம் பயனர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு விடும் என அந்த வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயன்பெற விரும்புவோர் தங்களின் விவரங்களை வழங்கி அக்கவுண்ட்டை உறுதிப்படுத்துவதற்கு ரூ. 250 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    எனினும், மத்திய அரசு சார்பில் இதுபோன்று எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. மக்களிடம் இருந்து பணத்தை அபகரிக்கும் வகையில் விஷமிகள் இவ்வாறு செய்து இருக்கின்றனர். அந்த வகையில் வைரல் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது. 

    வலைதளம் பார்க்க மத்திய அரசு உருவாக்கியது போன்றே காட்சியளிக்கிறது. இதனால் பலர் இதனை உண்மையென நம்பி தங்களது வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. 
    Next Story
    ×