search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் புகைப்படம்
    X
    வைரல் புகைப்படம்

    ஊரடங்கை மீறுவதாக சர்ச்சையை ஏற்படுத்தும் வைரல் புகைப்படம்

    தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறும் வகையில் தொழுகை நடத்தப்பட்டதாக புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    தமிழக முஸ்லீம்கள் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறியதாக கூறும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    வைரல் புகைப்படத்துடன் தமிழ் நாட்டில் முஸ்லீம்கள் இரவு நேரத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஊரடங்கு உத்தரவை மீறியதாக கூறப்பட்டுள்ளது.  புகைப்படத்தில் பலர் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்டது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

    வைரலாகும் புகைப்படத்தை ஆய்வு செய்ததில் அது உத்திர பிரதேச மாநிலத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் தமிழ் நாட்டில் எடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தற்சமயம் வைரலாகி உள்ளது. 

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    உண்மையில் இந்த புகைப்படம் 2018 ஆம் ஆண்டு உத்திர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகும். அந்த வகையில் வைரல் புகைப்படத்திற்கும் தற்போதைய ஊரடங்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. 

    இந்தியாவில் கொரோனா ஊரடங்கு உத்தரவு மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், அதிக பாதிப்பு ஏற்படாத பல்வேறு பகுதிகளில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×