search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பிரதமர் நிவாரண நிதிக்கு வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்கள் ரூ.2.5 கோடி நிதி

    பிரதமரின் நிவாரண நிதிக்கு வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊழியர்கள் ரூ.2.5 கோடி நிதி அளிக்க உள்ளனர்.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, இந்திய அரசு ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்’ (PM CARES Fund) என்ற பெயரில் ஒரு பொதுத் தொண்டு அறக்கட்டளையை அமைத்துள்ளது.

    இதில் தங்களால் இயன்ற நிதியை நிவாரணமாக வழங்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

    இதையடுத்து, தனி நபர், தனியார் பெரு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் என பலர் நிதி வழங்கி வருகின்றனர். பொதுத்துறையை சேர்ந்த வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் நிதி அளித்துள்ளன.

    இந்நிலையில், உலகின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஊழியர்களும், தங்களது ஒரு நாள் சம்பளமான ரூ.2.5 கோடியை பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிக்க உள்ளனர்,
    Next Story
    ×