search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
    X
    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

    ஆரோக்கிய சேது செயலியால் அந்தரங்கம் பறிபோகும் - ராகுல்காந்தி கவலை

    ‘ஆரோக்கிய சேது’ செயலியால் பயனாளர்களின் பாதுகாப்பு மற்றும் அந்தரங்கம் பறிபோவதற்கு வாய்ப்புள்ளதாக ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனா பரவலை தடுக்க, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ‘ஆரோக்கிய சேது’ என்ற செல்போன் செயலியை வெளியிட்டுள்ளது. இந்தச் செயலி, மக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்ட 13 நாள்களுக்குள் 5 கோடிக்கும் அதிகமானோரால் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் ‘ஆரோக்கிய சேது’ செயலியால் பயனாளர்களின் பாதுகாப்பு மற்றும் அந்தரங்கம் பறிபோவதற்கு வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார்.

    ஆரோக்கிய சேது செயலி


    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “ஆரோக்கிய சேது செயலி ஒரு அதிநவீன கண்காணிப்பு அமைப்பாகவும், எந்தவொரு மேற்பார்வையும் இன்றி தனியார் ஆபரேட்டருக்கு தரவுகளை வழங்குவதாகவும் உள்ளது. இதனால் அந்த செயலியை பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பு மற்றும் அந்தரங்கம் பறிபோகும் கவலை ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பம் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். ஆனால் குடிமக்களின் அனுமதியின்றி அவர்களை கண்காணிக்க பயன்படுத்தப்படக்கூடாது” என தெரிவித்துள்ளார். இதனிடையே ராகுல்காந்தியின் குற்றச்சாட்டை பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரியுமான ரவி சங்கர் பிரசாத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் ராகுல் தினமும் ஒரு புதிய பொய்யை கூறி வருவதாக அவர் சாடியுள்ளார்.

    இதுகுறித்து வெளியிட்டுள்ள அவர் டுவிட்டர் பதிவில் “ஆரோக்கிய சேது மக்களை பாதுகாக்கும் ஒரு சக்தி வாய்ந்த துணை. இது ஒரு வலுவான தரவு பாதுகாப்பு கட்டமைப்பை கொண்டுள்ளது. வாழ்நாள் முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட்டவர்களுக்கு, தொழில்நுட்பத்தை நன்மைக்காக எவ்வாறு பயன்படுத்த முடியும் என்று தெரியாது” என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×