search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் ஆணையம்
    X
    தேர்தல் ஆணையம்

    மகாராஷ்டிராவில் மே 21ல் சட்ட மேலவை தேர்தலை நடத்த முடிவு

    மகாராஷ்டிர மாநிலத்தில் காலியாக உள்ள எம்எல்சி பதவிகளுக்கு வரும் 21ம் தேதி தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, தனது பதவியில் நீடிக்க வேண்டுமானால் மே 28ம் தேதிக்குள் எம்.எல்.ஏ.வாகவோ அல்லது சட்ட மேலவை உறுப்பினரான எம்.எல்.சி.யாகவோ ஆக வேண்டும். எம்.எல்.சி. தேர்தல் மூலம் தனது பதவியை தக்கவைத்துக் கொள்ள உத்தவ் தாக்கரே திட்டமிட்டிருந்தார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் உத்தவ் தாக்கரே பதவியில் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. 

    இந்நிலையில், ஆளுநரின் வேண்டுகோளை ஏற்ற இந்திய தேர்தல் ஆணையம், மகராஷ்டிராவில் சட்டமேலவைத் தேர்தலை நடத்த  அனுமதி அளித்துள்ளது. மே 21ம் தேதி மும்பையில் தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதனால் உத்தவ் தாக்கரே சட்டமேலவை உறுப்பினர் ஆகி, பதவியில் நீடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநில சட்ட மேலவையில் 9 இடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×