search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரே
    X
    உத்தவ் தாக்கரே

    வெளிமாநில தொழிலாளர் விவகாரம்: மாநில முதல்-மந்திரிகளுடன் உத்தவ் தாக்கரே பேச்சு

    மும்பையில் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்புவது தொடர்பாக அந்தந்த மாநில முதல்-மந்திரிகளுடன் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மந்திரி அனில் தேஷ்முக் கூறினார்.
    மும்பை :

    கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மராட்டியத்தில் குறிப்பாக மும்பையில் அதிகளவில் உத்தரபிரதேசம், பீகார், சத்தீஸ்கர், மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநில தொழிலாளர்கள் சிக்கி தவிக்கின்றனர்.

    ஊரடங்கு மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 14-ந் தேதி பாந்திரா ரெயில் நிலையம் முன் திரண்டு வெளிமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப கோரி போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

    அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை மராட்டியம் வலியுறுத்தி வந்தது. வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப நேற்று மத்திய அரசும் அனுமதி வழங்கியது.

    இந்தநிலையில், வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக அந்தந்த மாநில முதல்-மந்திரிகளுடன் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

    வெளிமாநில தொழிலாளர்களை திட்டமிட்ட முறையில் எவ்வாறு ரெயில்கள் மற்றும் பஸ்கள் மூலம் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவது குறித்து அந்தந்த மாநில முதல்-மந்திரிகளுடன் உத்தவ் தாக்கரே கலந்துரையாடி வருகிறார். வெளிமாநில முதல்-மந்திரிகளுடனான இந்த பேச்சுவார்த்தை முடிந்ததும் தொழிலாளர்களை திருப்பி அனுப்புவது குறித்த முடிவை அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×