என் மலர்

  செய்திகள்

  மத்திய அரசு
  X
  மத்திய அரசு

  ஊழல் வழக்கில் கோர்ட்டால் தண்டிக்கப்படும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு புதிய சிக்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஊழல் வழக்கில் கோர்ட்டால் தண்டிக்கப்படும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணியிடை நீக்கத்தை மறுபரிசீலனை செய்வதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  புதுடெல்லி:

  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். ஆகிய அகில இந்திய பணி அதிகாரிகளின் பணியிடை நீக்கம் தொடர்பாக, 1969-ம் ஆண்டின் அகில இந்திய பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) சட்டத்தில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

  நீட்டிக்கப்படாவிட்டால், 60 நாட்கள் வரையும், நீட்டிக்கப்படும் பட்சத்தில் 120 நாட்கள் வரையும் பணியிடை நீக்கம் செய்யலாம். மத்திய, மாநில அரசுகள் அமைத்த மறுஆய்வு கமிட்டி சிபாரிசுப்படி, அந்த இடைநீக்கத்தை மறுபரிசீலனை செய்ய விதி முறைகளில் இடம் உண்டு.

  கோர்ட் உத்தரவு


  இந்நிலையில், ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக புதிய கிடுக்கிப்பிடி போட மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

  ஆகவே, ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகளின் இடைநீக்க உத்தரவை மேல்கோர்ட்டு இறுதி தீர்ப்பு அளிக்கும்வரை மறுபரிசீலனை செய்வதில்லை என்றவகையில், திருத்தம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

  இதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

  ஊழல் அதிகாரிகள், மீண்டும் பணிக்கு திரும்பக்கூடாது என்பதை உறுதி செய்ய மத்திய அரசு விரும்புகிறது. எனவே, இந்த திருத்தம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.

  இது நிறைவேற்றப்பட்டால், ஊழல், குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட அதிகாரிகள், காலவரையின்றி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையிலேயே இருப்பார்கள். மேல்கோர்ட்டு, தண்டனை தீர்ப்பை ரத்து செய்தால்தான் அவர்களுக்கு விடிவு கிடைக்கும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இந்த திருத்தம் கொண்டு வருவது குறித்து மே 15-ந் தேதிக்குள் தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய வனத்துறை அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

  ஒருவேளை, கருத்து தெரிவிக்காவிட்டால், திருத்தம் கொண்டுவர ஆட்சேபனை இல்லை என கருதப்படும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×