search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஓசோன் படலம் தானாக மூடிக் கொண்டதற்கு இது தான் காரணமா?

    ஓசோன் படலத்தில் இருந்து வந்த பெரும் துளை தானாக மூடிக் கொண்டதற்கு கொரோனா ஊரடங்கு தான் காரணம் என தகவல் வைரலாகி வருகிறது.



    கொரோனா ஊரடங்கு காரணமாக உலகம் முழுக்க மக்கள் வீடுகளுக்குள் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் சார்ந்த செய்தி தொகுப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், ஓசோனில் ஏற்பட்டிருந்த துளை மூடிக் கொண்டதாக ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டு இருக்கின்றனர். 

    சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளை பூமிக்கு வராமல் தடுக்கும் இயற்கை அரணாக ஓசோன் படலம் விளங்குகிறது. பூமியை சுற்றிலும் காணப்படும் இந்த ஓசோன் எனப்படும் ஆக்சிஜன் படலமானது (O3),சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

    இந்நிலையில், ஓசோன் படலத்தில் இருந்து வந்த துளை தானாக மூடிக் கொண்டதற்கு ஊரடங்கு தான் முக்கிய பங்கு வகித்தது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும் இதுபற்றிய தகவல்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், ஓசோன் படலம் சரியானதற்கும், கொரோனா ஊரடங்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆராய்ச்சியாளர்களின் படி ஓசோனில் மிகப்பெரிய துளை ஏற்பட்டதும் அதுதாமாக மூடியதும் போலார் வோர்டெக்ஸ் எனப்படும் வாயு சுழற்சியே காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஐரோப்பிய மையத்தின் (ஈ.சி.எம்.டபிள்யூ.எஃப்) கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை (சி 3 எஸ்) மற்றும் கோப்பர்நிக்கஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவை (சிஏஎம்எஸ்) ஆகியவை இதனை உறுதிப்படுத்தின.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×