search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    சிறிய அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே இருக்கலாம்- மத்திய அரசு உத்தரவு

    கொரோனா வைரஸ்கான சிறிய அறிகுறிகள் உள்ளவர்கள் இனி ஆஸ்பத்திரிக்கு வராமல் வீட்டிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று கொள்ளலாம் என்று புதிய உத்தரவை மத்திய சுகாதாரத்துறை வழங்கி உள்ளது.

    புதுடெல்லி:

    கொரோனா நோயால் தாக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது.

    கொரோனா அறிகுறி இருந்தாலே அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். ஆனால் சிறிய அறிகுறிகள் உள்ளவர்கள் இனி ஆஸ்பத்திரிக்கு வராமல் வீட்டிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று கொள்ளலாம் என்று புதிய உத்தரவை மத்திய சுகாதாரத்துறை வழங்கி உள்ளது.

    அதாவது கொரோனா அறிகுறி தென்பட்டால் அது பற்றி உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் நேரடியாக வீட்டுக்கு வந்து ஆய்வு செய்வார்கள். அவருக்கு சிறிய அளவில் மட்டும் நோய் தாக்குதல் இருந்தால் வீட்டிலேயே தனிமையில் இருந்து சிகிச்சை பெறலாம் என்று அனுமதி அளிக்கப்படும்.

     

    கொரோனா வைரஸ்

    அவருக்கு சில மருந்துகள் மட்டும் வழங்கப்படும். வீட்டில் உள்ள அனைவருக்கும் ஹைட்ராக்சின் குளோரோ க்யூன் மாத்திரை வழங்கப்படும். ஆரோக்கிய சேது ஆப் மூலம் இதற்கான வழிகாட்டுதல்கள் 24 மணி நேரமும் வழங்கப்படும்.

    அவ்வப்போது மருத்துவ குழுவினர் வீட்டுக்கே வந்து அவரை பரிசோதிப்பார்கள். நிலைமை மோசமானால் மட்டும் ஆஸ்பத்திரிக்கு அவர் அழைத்துச் செல்லப்படுவார். மற்றபடி அவர் வீட்டிலேயே தனிமையில் இருக்கலாம். ஆஸ்பத்திரிக்கு வர வேண்டியது இல்லை.

    ஏற்கனவே பொதுமக்கள் 20 வினாடிகள் கை கழுவ வேண்டும் என்று மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி இருந்தது. இப்போது 40 வினாடி கைகளை கழுவ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×