search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சவரத் தொழிலாளியிடம் முடிவெட்டிய 6 பேருக்கு கொரோனா

    சவரத் தொழிலாளியிடம் முடி வெட்டிய 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு ஓட்டல் ஊழியரை, கொரோனா தடுப்பு நடவடிக்கையின் கீழ் தனிமைப்படுத்தி வைத்து இருந்தனர்.

    அவருடைய நண்பர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதன் விளைவாக அவரை தனிமைப்படுத்தினர்.

    ஆனால் அந்த ஓட்டல் ஊழியர், மருத்துவர்களின் அறிவுரையை கேட்காமல் அங்கு இருந்து தப்பி அவரது சொந்த கிராமத்திற்கு ஓடிவிட்டார்.

    அவரை கண்டுபிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டனர். மத்தியபிரதேசம் கார்கோன் மாவட்டத்தில், பேட்கான் என்பது, அந்த ஊழியரின் சொந்த ஊர் என்பதை அறிந்து, அங்கு விரைந்தனர். அவரை பொறி வைத்து பிடித்தனர். அவரோடு நெருக்கமாக தொடர்பு கொண்டவர்கள் யார்? யார்? என்பதை விசாரித்தனர்.

    அப்போது, அந்த ஊழியர் ஊருக்குச் சென்றதும், கிராமத்து சவரத் தொழிலாளி ஒருவரின் வீட்டுக்குச் சென்று முடிவெட்டியதாக தெரிவித்தார்.

    உடனே சுதாரித்த சுகாதார அதிகாரிகள், அந்த சவரத் தொழிலாளியிடம் வேறு யார்? யார்? சென்று முடிவெட்டினார்கள் என்பதை கண்டறிந்து சவரத்தொழிலாளி உள்பட 12 பேரை மருத்துவ வளையத்துக்குள் கொண்டுவந்து தனிமைப்படுத்தினார்கள்.

    12 பேரின் ரத்த மாதிரிகளும் எடுக்கப்பட்டு கடந்த 7-ந் தேதி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இப்போதுதான் முடிவு தெரிந்தது.

    அதன்படி சவரத் தொழிலாழியிடம் முடிவெட்டிய 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மீதி உள்ள 6 பேருக்கும் மீண்டும் ஒருமுறை ரத்தப் பரிசோதனை செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள்.

    இதுபற்றி அந்த மாட்ட கலெக்டர் கோபால் சந்ராடாடு கூறும்போது, “கொரோனா தொற்று இருந்த ஓட்டல் ஊழியருக்கு, ஒரு சவரத் தொழிலாளி முடிவெட்டி இருக்கிறார். அவர் முடிவெட்டிய மேலும் 6 பேருக்கு கொரோனா பரவி இருக்கிறது” என்றார்.

    “முடிவெட்டும்போது பயன்படுத்திய துணி, கத்தரி போன்றவை மூலம் பரவியதா? அல்லது நோயாளியோடு நேரடி தொடர்பின் மூலம் பரவியதா? என்பது இன்னும் தெரியவில்லை” என்றும் அவர் சொன்னார்.
    Next Story
    ×