என் மலர்

  செய்திகள்

  வெங்காயம்
  X
  வெங்காயம்

  தாராவியில் சிக்கி தவித்தவர் வெங்காய வியாபாரியாக மாறி சொந்த ஊர் திரும்பினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவர் மும்பையில் இருந்து வெங்காய வியாபாரியாக மாறி சொந்த ஊர் திரும்பி உள்ளார்.
  அலகாபாத்:

  உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்தவர் பிரேம் மூர்த்தி பாண்டே. 56 வயதான இவர் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.

  பிரேம் தாராவியில் உள்ள குடிசைப் பகுதியில் வசித்து வருகிறார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதில் இருந்தே அவர் அங்கு தான் இருக்கிறார்.

  தாராவி பகுதியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று மிக வேகமாக இருந்ததால் அவர் அங்கு வசமாக சிக்கிக் கொண்டார். இதனால் அவர் அங்கிருந்து எப்படியாவது சொந்த ஊருக்குத் திரும்பிவிட வேண்டும் என்று முடிவு எடுத்தார்.

  காய்கறி, பழங்கள் போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி இருப்பதை உணர்ந்தார். இதனால் வெங்காயத்தை வாங்கி அதன் மூலம் ஊர் சென்று விடலாம் என்று நினைத்தார். நாசிக் சென்று 25.2 டன் வெங்காயத்தை ரூ.2.3 லட்சத்திற்கு வாங்கினார். பின்னர் வாடகைக்கு ஒரு சிறிய லாரியை எடுத்தார். அதற்கு 77 ஆயிரம் வாடகை கொடுத்தார். அன்றே அவர் மும்பையில் இருந்து புறப்பட்டு சொந்த ஊரான அலகாபாத் சென்றடைந்தார்.

  அங்குள்ள சிறிய வியாபாரிகளிடம் அவர் வெங்காயத்தை விற்று தான் முதலீடு செய்த ரூ. 3 லட்சத்தையும் திரும்பப் பெற்றார். அவர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு “ஹாட்ஸ்பாட்” பகுதியான தாராவியில் இருந்து சொந்த ஊர் திரும்பி தன்னை பாதுகாத்துக் கொண்டார்.

  மும்பையில் இருந்து வந்தது பற்றி அறிந்ததும் பிரேமிடம் சுகாதார அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்கள். அவரை வீட்டில் தனிமையில் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
  Next Story
  ×