என் மலர்

  செய்திகள்

  தனிமைப்படுத்துதல்
  X
  தனிமைப்படுத்துதல்

  முகாமில் தமிழருக்கு கொரோனா பாதிப்பு: சப்-கலெக்டர், இன்ஸ்பெக்டரை தனிமைப்படுத்த உத்தரவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோழிக்கோட்டில் உள்ள முகாமில் தங்கியிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த முதியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து சப்-கலெக்டர், இன்ஸ்பெக்டரை தனிமைப்படுத்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
  கோழிக்கோடு:

  கேரள மாநிலம் கோழிக்கோட்டில், இம்மாத தொடக்கத்தில், ஆதரவின்றி சாலையில் திரிந்த, தமிழ்நாட்டை சேர்ந்த 67 வயது முதியவர், அங்குள்ள முகாமில் அடைக்கப்பட்டார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் ஆவார். அந்த முகாமை சமீபத்தில் சப்-கலெக்டர், சர்க்கிள் இன்ஸ்பெக்டர், தன்னார்வலர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.

  இதற்கிடையே, தமிழ்நாட்டு முதியவருக்கு கடந்த 24-ந்தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

  இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சப்-கலெக்டர், இன்ஸ்பெக்டர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சாம்பசிவ ராவ் கேட்டுக்கொண்டார்.

  பரிசோதனைக்காக அவர்களின் சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×