என் மலர்

  செய்திகள்

  ராஜ்நாத்சிங்
  X
  ராஜ்நாத்சிங்

  வெளிநாடுகளின் அச்சுறுத்தல்: ராணுவத்தின் தயார்நிலை பற்றி ராஜ்நாத்சிங் ஆலோசனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தற்போதைய கொரோனா சூழ்நிலையை பயன்படுத்தி, எதிரி நாடுகள் அத்துமீறாதவாறு முப்படைகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ராஜ்நாத்சிங் உத்தரவிட்டார்.
  புதுடெல்லி :

  ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவனே, கடற்படை தளபதி கரம்பிர் சிங், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா, பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  இந்த கூட்டத்தில், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடனான எல்லையில் உள்ள நிலவரம் குறித்து ராஜ்நாத்சிங்கிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். வெளிநாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள முப்படைகளின் தயார்நிலை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

  தற்போதைய கொரோனா சூழ்நிலையை பயன்படுத்தி, எதிரி நாடுகள் அத்துமீறாதவாறு முப்படைகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ராஜ்நாத்சிங் உத்தரவிட்டார்.
  Next Story
  ×