என் மலர்

  செய்திகள்

  ராகுல் காந்தி
  X
  ராகுல் காந்தி

  அகவிலைப்படி உயர்வை நிறுத்தியது மனிதநேயமற்ற செயல் - ராகுல் காந்தி கண்டனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அகவிலைப்படி உயர்வை நிறுத்தியது மனிதநேயமற்ற செயல் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
  புதுடெல்லி:

  கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

  அதன் ஒரு பகுதியாக, எம்.பி.க்களின் சம்பளத்தை குறைத்ததுடன் அவர்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியையும் ரத்து செய்தது.

  இதற்கிடையே, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ரத்து செய்யப்படும் என மத்திய அரசு ரத்து அறிவித்துள்ளது.

  அதன்படி, வரும் ஜூலை 1 முதல் 2021-ம் ஆண்டு ஜனவரி 1 வரை அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

  இந்நிலையில், மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை நிறுத்தியது மனிதநேயமற்ற செயல் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், படைவீரர்கள் ஆகியோரின் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்த மத்திய அரசின் செயல் மனிதநேயமற்றது. உணர்ச்சியற்ற செயல்.

  கொரோனாவுக்கு எதிரான போரில் மத்திய அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் இச்செயலை அரசு செய்துள்ளது. இதற்குப் பதிலாக புல்லட் ரெயில் திட்டம், பாராளுமன்றத்தை அழகுபடுத்தும் திட்டத்துக்கு லட்சம் கோடிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு அந்த செலவை நிறுத்தலாம் என பதிவிட்டுள்ளார்.
  Next Story
  ×