என் மலர்

  செய்திகள்

  உள்துறை இணை செயலாளர் புனியா சலீலா ஸ்ரீவத்சவா
  X
  உள்துறை இணை செயலாளர் புனியா சலீலா ஸ்ரீவத்சவா

  கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு - சென்னை வருகிறது உள்துறை அமைச்சக குழு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த மத்திய உள்துறை அமைச்சக குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என உள்துறை இணை செயலாளர் புனியா சலீலா ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
  புதுடெல்லி:

  சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா உள்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
  இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

  கொரோனா வைரஸ் பரவலைக்  கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

  இதற்கிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக உள்துறை அமைச்சகம் சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுக்கள் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உள்ளன.

  இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த மத்திய உள்துறை அமைச்சக குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புனியா சாலிலா ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×